என்னது கோவிட் தடுப்புசி போட்டுக்கொண்டால் ஆன்ட்ராய்ட் மொபைல் பரிசா !

கொரோனா தொற்றின் 2 ம் அலை இந்தியாவை பெரிதும் தாக்கியது.மேலும் இதன் பரவலை கட்டுப்படுத்த அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றில் இருந்து நம்மை காத்துக்கொள்ள மிக சிறந்த வழி தடுப்பூசி.இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் அதிக அளவில் போடப்பட்டு வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு தனியார் ஓட்டுனர் பயிற்சி சங்கத்தின் சார்பில் ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்கப்படுகிறது.

தற்போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நாளை தடுப்பூசி செலுத்திக் கொண்டால் ஆன்ட்ராய்ட் செல்போன் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். நாளை தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆண்ட்ராய்ட் மொபைல் 3 பேருக்கு வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க : என்னது கோவிட் தடுப்புசி போட்டுக்கொண்டால் ஆன்ட்ராய்ட் மொபைல் பரிசா !