1 முதல் 5 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு !

கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக பள்ளிகள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்பட்டு மாணவர்களின் நலன் கருதி பள்ளி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தன.

மேலும் பள்ளிகளை திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது.கர்நாடகா,பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன.மேலும் தமிழகத்திலும் செப் 1 முதல் 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

தற்போது உத்தரகண்ட் அரசு தொடக்கப் பள்ளிகளைத் திறக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. செப்டம்பர் 21 முதல் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் உத்தரகாண்டில் கடந்த மாதம் 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அம்மாநில அரசு கொரோனா நெறிமுறைகளை பின்பற்றுமாறு பள்ளிகளுக்கு தெரிவித்துள்ளது.மேலும் மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்த கூடாது என்று பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க : வடமாநிலங்களில் ஒரே நாளில் 22 பேருக்கு டெங்கு