தற்போது ‘மாஸ்டர்’ படத்தின் ரிலீஸை எதிர்பார்த்துதான் மொத்த திரையுலகமும் உள்ளது. இந்நிலையில், மாஸ்டர் படத்தின் தெலுங்கு டீசர் நாளை (டிசம்பர் 17) வெளியாக உள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் #MasterTeluguTeaser என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு, ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். ஏப்ரல் மாதமே திரைக்கு வரவேண்டிய படம் கரோனா பிரச்னை காரணமாக வெளியீட்டில் தாமதமானது.



