விவசாயிகளுக்கு ஆதரவாக தேசிய தலைநகரின் எல்லை பகுதியான சிங்குவில் சீக்கிய துறவி ஒருவர் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
விவசாயிகளின் போராட்டம் குறித்து அவர் எழுதிய கடிதத்தில், “உரிமைகளுக்காக தெருவில் இறங்கி போராடும் விவசாயிகளின் இன்னல்களை கண்டேன். அவர்களுக்கான நீதி வழங்காமல் இருப்பதை கண்டு மன உளைச்சலுக்கு உள்ளானேன். அது ஒரு குற்றம். எனவே, அரசின் அடக்குமுறையை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக இந்த ஊழியன் தற்கொலை செய்ய போகிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



