இந்நிலையில் சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 50 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.86.53ஆக விற்கப்படுகிறது. இதேபோல் டீசல் விலை 54 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ 79.23 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
கடந்த 13 நாள்களில் மட்டும் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 6 ரூபாய் 28 காசுகளும், டீசல் லிட்டருக்கு 6 ரூபாய் 55 காசுகளும் உயர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



