மத்தியப் பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்கள் நியமனம் !

தமிழகம் உட்பட 12 மத்தியப் பல்கலைக்கழகங்களில் மத்தியக் கல்வி அமைச்சகம் துணைவேந்தர்களை நியமித்ததற்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதில் ஹரியாணா மத்தியப் பல்கலைக்கழகம், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு, ஜார்க்கண்ட், கர்நாடகா, தமிழ்நாட்டில் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம், ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூர் பல்கலைக்கழகம், மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம் ,வடகிழக்கு மலை பல்கலைக்கழகம் , பிலாஸ்பூர் மத்தியப் பல்கலைக்கழகம் மற்றும் குரு காசிதாஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.