கனமழை காரணமாக மகாராஷ்டிராவில் நிலச்சரிவு !

மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இந்த பருவநிலை காரணமாக மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் நேற்று மாலை பல மாவட்டங்களில் கனமழையால் நிலச்சரிவு மற்றும் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தானே மாவட்டத்தில் கல்யாண் மற்றும் பிவாண்டி பகுதியில் ஆற்று நீர் வீடுகளுக்குள் புகுந்தது. வெள்ளிக்கிழமை இம்மாநிலத்தின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள மஹாட் தாலுகாவில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர்.நிலச்சரிவில் மேலும் 30 பேர் சிக்கி இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.கோலாப்பூர் மாவட்டத்தில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதால் 47 கிராமங்கள் மாவட்டத்தின் இதர பகுதியில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி வருகின்றனர்.மேலும் ஐ.எம்.எஸ்.அபிமன்யு என்ற கடற்படை போர்க்கப்பலும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது