வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் பலி

ஆரணி அருகே வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள்; 4 பேர் காயம் அடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சந்தவால் பகுதியில் ஒரு வேன் சென்று கொண்டு இருந்தது திடீர் என வேனின் டயர் வெடித்து. எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.

இதில் ஒரு குழந்தை உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காயம் அடைந்த 4 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.