சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் விஜய்- தோனி சந்திப்பு புகைப்படம் வெளியிடப்பட்டு இருந்தது.
விளம்பர படப்பிடிப்பிற்காக கோகுலம் ஸ்டூடியோவிற்கு தோனி விசிட் அடிக்க, அங்கு ஏற்கனவே பீஸ்ட் படத்தின் சூட்டிங்கில் பிசியாக நடிகர் விஜய் இருந்துள்ளார். அப்போது தோனி வருகையை அறிந்த விஜய், அவரை நேரில் சென்று சந்தித்து, கேரவனுக்கு அழைத்து சென்று கலந்துரையாடினார். அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் சந்தித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகின.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் விஜய்- தோனி சந்திப்பு புகைப்படம் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த புகைப்படம் 24 மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகளை அள்ளியுள்ளது.



