சொர்க்கவாசல் திறப்பு – ஸ்ரீரங்கம் !

பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அழைக்கப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில்.இது 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானது.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா இன்று அதிகாலை நடைபெற்றது. பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி பரவசத்துடன் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

கடந்த 15ஆம் தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது.கடந்த 10 நாள்களாக பகல்பத்து வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் உற்சவர் நம்பெருமாள் தினமும் ஒரு அலங்காரத்தில் எழுந்தருளினார்.. பகல்பத்து வைபவத்தின் நிறைவு நாளான நேற்று மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார்.

அதிகாலை 4.45 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்ட உடன் அங்கு கூடி இருந்தவர்கள் கோவிந்தா கோவிந்தா என்று பக்திப் பரவசத்தில் முழக்கமிட்டனர். பெரிய விழாவான பரமபத வாசல் திறப்பில் தமிழ்நாடு முழுவதுமிருந்து ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.
ஆனால் இந்த ஆண்டு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

குறிப்பிட்ட சிலர் மட்டுமே சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட பக்தர்கள் சொர்க்கவாசல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று அதிகாலை 4.45 மணிக்கு நடைபெற்றது.இன்றைய அலங்காரத்தில் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு திரு ஆபரணங்கள் அணிந்து புறப்பட்டுத் திருச்சுற்றில் உள்ள தங்க மரத்தைச் சுற்றிவந்து செர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் சென்றடைந்தார்.