வாஜ்பாய் பிறந்தநாளான இன்று -அவரை குறித்து புத்தகம் வெளியிடும் மோடி !

அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள், நமது சுதந்திர இந்தியாவின் 10வது பிரதம மந்திரி ஆவார்.வாஜ்பாய் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் பல முக்கியமான திட்டங்களையும் முடிவையும் எடுத்தார். இன்று இவரது 96ஆவது பிறந்தநாளாக கொண்டாப்படுகிறது.

இந்நிலையில், அவரது பிறந்தநாளையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வாஜ்பாயின் திருவுருவப்படத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மலர்த்தூவி மரியாதை செலுத்துகிறார்.வாஜ்பாயின் சேவைகளை கௌரவிக்கும் வகையில் மக்களவைச் செயலகத்தால் ‘அடல் பிஹாரி வாஜ்பாய்’ என்ற புத்தகத்தை மோடி வெளியிடுகிறார்.

இந்த புத்தகத்தில் ,வாஜ்பாயின் வாழ்க்கை, படைப்புகளை எடுத்துக்காட்டும் வகையில், நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய சில முக்கிய உரைகள்,மேலும் அவரது சில அறிய புகைப்பமும் இடம்பெற்றுள்ளன.வாஜ்பாய்க்கு 2014 டிசம்பரில் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.