புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கூடாது -கிசான் சேனா விவசாய அமைப்பு !

கிசான் சேனா விவசாய அமைப்பினர் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கூடாது என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர் .உத்தரப் பிரதேசத்தின் 15 மாவட்டங்களைச் சேர்ந்த கிசான் சேனாவின் பிரதிநிதிகள், மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரைச் சந்தித்து புதிய வேளாண் சட்டங்களுக்கு தங்களது ஆதரவை வழங்கினர்.

மூன்று வேளாண் சீர்த்திருத்தச் சட்டங்களை எந்த நிபந்தனையிலும் ரத்துசெய்ய வேண்டாம் எனவும் இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற்றால் பெரியளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர் .

நரேந்திர மோடி தலைமையிலான அரசு இயற்றிய மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த 30 நாள்களாக விவசாயிகளின் போராட்டம் நடந்துவருகிறது.இந்நிலையில் இந்த சட்டங்களை ஆதரிக்கும் வகையில் பல விவசாய அமைப்புகளும் மத்திய வேளாண்மை அமைச்சரைச் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துவருகின்றன.