நீங்களும் இப்படி தான் மேக்கப் போடுவீங்களா!

பெண்கள் இந்த காலத்தில் தங்களை ஒப்பனை செய்து கொள்வதில் சிறந்து விளங்குகிறார்கள்.மேக்கப் போடுவது என்றால் அதில் சில முறைகளை பின்பற்றினால் தோளில் எந்த வித பிரச்னையும் இல்லாமல் நம் சருமத்தை பாதுகாக்கலாம் .முதலில் நமக்கு சருமம் என்ன என்பதை கண்டறிய வேண்டும் .எண்ணெய் சருமம்,வறண்ட சருமம் , சென்சிடிவ் சருமம் இதில் நீங்கள் என்ன என்பதை அறிந்து அதற்கு தகுந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

மேக்கப் போடுவதற்கு முன்பு டோனர் அல்லது பிரய்மர் முகத்தில் போட்டுக்கொள்ளவும் . இதனால் நம் சருமத்தில் உள்ள குழிகளை மூடும் மேலும் ஒரு பாதுகாப்பு படலம் போல் செயல்படும் .

கண் ஒப்பனை மற்றும் ஐ பிரௌ முதலில் செய்யவும்.நீங்கள் அடர் பழுப்பு அல்ல சாம்பல் நிற பென்சிலை பயன்படுத்தலாம்.

அடுத்ததாக ,உங்கள் விரல்களை உபயோகித்து பவுண்டேஷனை பூசினால், இலகுவான கவரேஜ் கிடைக்கும் .அடுத்ததாக ஒரு க்ளாஸி லூக்கிற்காக நீங்கள் லூஸ் பவுடர் பயன்படுத்தலாம்.பிறகு லிப் லைனரை, லிப்ஸ்டிக் போடவும்.