ரஜினி மருத்துவமனையில் அனுமதி

ரஜினிகாந்தின் உடலில் ரத்த அழுத்ததில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக, தற்போது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல் நிலை சீராகும் வரை, மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என, மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் இன்று(டிச.25) காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 10 நாள்களாக ஹைதராபாதில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவந்தது. முன்னதாக, படக்குழுவைச் சேர்ந்த நான்கு பேருக்கு கோவிட் 19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டநிலையில், இன்று ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.