பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் !

earthquake in vellore district : வேலூரில் நில அதிர்வு
வேலூரில் நில அதிர்வு

பிலிப்பைன்சில் தலைநகர் மணிலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.2 ஆகப் பதிவாகி உள்ளதாகத் தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. உறக்கத்தில் எழுந்த மக்கள் அச்சத்துடன் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.சேதவிவரங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மணிலாவில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட அதே நேரத்தில் தலைநகர் டெல்லியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.