திருவனந்தபுரம் மாநகர தந்தையாக 21 வயது கல்லூரி மாணவி தேர்வு !

இந்தியாவிலேயே முதன்முதலாகத் திருவனந்தபுரம் மாநகர மாநகரத்தந்தையாக 21 வயதான கல்லூரி மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இதன்மூலம் மிக இளம் வயதில் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்னும் அடையாளத்தைப் பெற்றிருக்கிறார்.அண்மையில் கேரள மாநிலத்தில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

இதில் பெருவாரியான இடங்களில் இடதுசாரி ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது.இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வெற்றிபெற்ற வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து ஆலோசித்து, ஆர்யா ராஜேந்திரனின் பெயரைப் பரிந்துரை செய்துள்ளனர்.

மேலும் மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆர்யாவை மேயராகத் தேர்ந்தெடுப்பதாக முடிவு செய்துள்ளது.இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய ஆர்யா ராஜேந்திரன், நான் தற்போது கவுன்சிலராக இருந்து வருகிறேன். எனக்கு வழங்கப்பட்ட பதவியை வைத்து, பெண்களின் முன்னேற்றத்துக்கும் சமூக வளர்ச்சிக்கும் பாடுபடுவேன் என்று தெரிவித்தார்