10 ஆண்டுகளுக்கு பின் நடிக்கவரும் நடிகர் வடிவேலு

வடிவேலு கடந்த பத்து வருடமாக தனக்கு எந்த திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்க வில்லை என்பதையும், இப்போது 10 ஆண்டுகளாகத் தான் முடக்கப்பட்ட நிலையில் இருப்பதையும் பற்றிப் பேசும்போது, ​​ அவர் உணர்ச்சி வசப்படும் வீடியோவில் சில நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது, 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த வடிவேலு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.

தற்போது எம் மகன் படப் புகழ் இயக்குனர் திருமுருகன் இயக்கும் ஒரு படத்திற்காக வடிவேலுவை நடிக்கக் கேட்டிருக்கின்றனர்.

திருமுருகன் டிவியில் பஞ்சவர்ணக்கிளி, மெட்டி ஓலி மற்றும் இப்போது ஒளிபரப்பாகும் கல்யாண வீடு உள்ளிட்ட பல சீரியல்களை இயக்கியுள்ளார். எம் மகன் படம் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமானார்.