இன்றைய தங்கம் விலை

பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன.

இந்தநிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 3 உயர்ந்து ரூ.4417க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.35,336க்கு விற்பனையாகிறது.

இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 38,408 ரூபாய்க்கு விற்பனையாகிறது.வெள்ளியின் விலை 70 பைசா குறைந்து 74.40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.74,400 ஆக உள்ளது.