திருப்பதி கோவிலுக்கு ரூ 2 கோடி மதிப்புள்ள தங்க சங்கு காணிக்கை

Tirupati Temple
திருப்பதி மலையில் 7 கி.மீ. நீள பக்தர்கள் வரிசை

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தேனியை சேர்ந்த பக்தர் ஒருவர் ரூ 2 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட சங்கு, சக்கரத்தை காணிக்கையாக இன்று வழங்கினார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நன்கொடையாக வழங்குவதற்காக தேனியை சேர்ந்த தங்கதுரை என்ற பக்தர் ரூபாய் 2 கோடி மதிப்பில் நான்கு கிலோ தங்கத்தால் சங்கு மற்றும் சக்கரத்தை தயார் செய்துள்ளார். நேற்று திருமலைக்கு கொண்டுவரப்பட்ட சங்கு சக்கரத்தை இன்று ஏழுமலையான் கோவிலில் வழங்கியுள்ளார். இதுகுறித்து தங்கதுரை கூறியதாவது: கடந்த 50 ஆண்டுகளாக ஏழுமலையானை தரிசனம் செய்து வருகிறேன்.

கடந்த மார்ச் 23ஆம் தேதி ஏழுமலையானை தரிசனம் செய்ய முன்பதிவு செய்திருந்தேன். ஆனால் கொரோனா ஊரடங்கு காலகட்டம் என்பதால் ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியவில்லை. . இந்நிலையில் . கொரோனா காலகட்டத்தில் 30 நாட்கள் எனது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தேன். அப்பொழுது ஏழுமலையானுக்கு சங்கு, சக்கரம் காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொண்டேன் . வேண்டிக் கொண்ட சில நாட்களிலேயே குணம் அடைந்தேன்.