அதிரடி காட்டும் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தை அதிகம் தாக்கியது.இந்நிலையில் புதுவையிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது.மேலும் பரவலை கட்டுப்படுத்த தமிழகம் மற்றும் புதுவையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

கொரோனா தடுப்பு விதிகளான மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது மிக கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது.மேலும் தடுப்பூசி போடுவது மிக முக்கியம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் நம் நாட்டில் அனைவரும் தடுப்பூசி போடவேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது.தற்போது தடுப்பூசி போட்டால்தான் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் நிலை உருவாக வாய்ப்பு என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தராஜன் கூறியுள்ளார்.

மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் இருந்தால்தான் கல்வி நிலையங்களில் சேரலாம் என்ற நிலை உருவாக வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.