தனுஷுடன் இணையும் இயக்குனர் இமயம் !

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தனது அசுர நடிப்பால் ரசிகர்களை தன் வசம் மாக்கியுள்ளவர்.இவரது நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் இவரது நடிப்பிற்கு விருந்தாக அமைந்தது என்றே சொல்லவேண்டும்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் மாறன்.இதற்கு அடுத்து மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகும் ‘டி44’ படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ்.இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் டி44 படத்தின் படப்பிடிப்பை தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் தனுஷுடன் நடிக்க பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த படத்தில் ஹன்சிகா , ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய மூவரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.