Corona Vaccine: தடுப்பூசி செலுத்தாவிட்டால் பள்ளிகளில் அனுமதி கிடையாது

கொரோனா தடுப்பூசி

Corona Vaccine: ஹரியானாவில் 15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்கள் தடுப்பு செலுத்தவில்லை என்றால் பள்ளிக்கு வர அனுமதி இல்லை என்று ஹரியானா மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

இதனையடுத்து, ஹரியானாவில் 15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்கள் தடுப்பு செலுத்தவில்லை என்றால் பள்ளிக்கு வர அனுமதி இல்லை என்று ஹரியானா மாநில அரசு தெரிவித்துள்ளது. எனவே பெற்றோர்கள் சிறார்கள் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: IPL 2022: சிஎஸ்கேவுக்கு புது கேப்டன்..!