கொரோனா தடுப்பூசியால் எழுந்து உட்கார்ந்த பக்கவாத நோயாளி

paralysed man
கொரோனா தடுப்பூசியால் எழுந்து உட்கார்ந்த பக்கவாத நோயாளி

ஒரு வருடத்துக்கும் மேலாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு மரணப் படுக்கையில் இருந்த நபர் கொரோனா தடுப்பூசியால் முற்றிலும் குணமடைந்து எழுந்து நடமாடும் நிகழ்வு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்திகள் வேகமாக பரவி வரும் நிலையில், சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பல லட்சங்களை செலவழித்தும் பலன் இல்லாத நிலையில் ஒரே ஒரு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் அந்த நபர் குணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்தியாவில் இரண்டு அலைகள் ஏற்படுத்திய பாதிப்புகளை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம். உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் தான் கடந்த இரண்டாவது அலையின் போது பாதிப்பு அதிகமாக இருக்க காரணமாக இருந்தது.

அதேபோல தற்போது ஒமைக்ரான் என்ற வைரஸ் மூன்றாவது அலைக்கு வழி வகுத்திருக்கிறது. டெல்டாவை காட்டிலும் ஒமைக்ரான் மூன்று மடங்கு அதி வேகமாக பரவக்கூடியது என்பதால் ஒட்டுமொத்த உலக நாடுகளும் அதிர்ச்சியில் உள்ளன. இந்நிலையில் கடந்த 200 நாட்களில் இல்லாத அளவிற்கு 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஒரே நாளில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. சளி, இருமல் என்று மருத்துவமனைக்கு செல்பவர்களில் 90 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நிலை உள்ளது.

இந்நிலையில்தான் ஜனவரி 6ஆம் தேதி சுகாதார பணியாளர்கள் அவருக்கு கோவி ஷீல்ட் தடுப்பூசி செலுத்தினர். இதனை அடுத்து ஜனவரி 9ஆம் தேதி அவர் திடீரென எழுந்து நடக்கத் தொடங்கினார். அவர் குணமானதை அறிந்து அவரது உறவினர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். இந்த செய்தி அம்மாநிலம் முழுவதும் காட்டுத்தீயாக பரவியது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்திய பின்னர் என்ன நடந்தது என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். தடுப்பூசி போட்ட உடனே உடலில் என்ன மாற்றம் ஏற்பட்டது என்பதை ஆய்வு செய்யாமல் இந்த விஷயத்தில் எதுவும் கூற முடியாது என மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: Corona Vaccine: தடுப்பூசி செலுத்தாவிட்டால் பள்ளிகளில் அனுமதி கிடையாது