என்னது..மும்பையில் தடுப்பூசி தட்டுப்பாடா !

சென்னை ஐஐடியில் 3 நாட்களில் 30 பேருக்கு பாசிட்டிவ்
சென்னை ஐஐடியில் 3 நாட்களில் 30 பேருக்கு பாசிட்டிவ்

கரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கிய நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.இந்தியாவில் மகாராஷ்டிரா,கர்நாடகா மற்றும் தமிழகத்தில் கரோனா தாக்கம் அதிகம் காணப்படுகிறது.

மும்பை மகாராஷ்டிராவில் கரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை நெருங்கி உள்ளதால், நாள் ஒன்றுக்கு சுமார் 5 லட்சம் பேர் வரை தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது தடுப்பூசி மருந்துகள் எதுவும் கைவசம் இருப்பு இல்லாததால் பொதுமக்களை சுகாதார ஊழியர்களும், காவல்துறையும் திருப்பி அனுப்பியது.தடுப்பூசி தட்டுப்பாடு தொடர்பாக மத்திய அரசு, மகாராஷ்டிரா இடையே ஏற்கனவே வார்த்தை மோதல் ஏற்பட்டு மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், 5 லட்சம் டோஸ் தடுப்பூசியை வீணடித்ததாக குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.