தலைவி பட ரிலீஸ் தேதி மாற்றம் !

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி ஏ.எல். விஜய் உருவாக்கியுள்ள படம் ‘தலைவி’. இந்த படம் இந்தி மற்றும் தமிழில் வரும் ஏப்ரல் 23ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் இந்த கரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கிய நிலையில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.திரையங்கள் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும் என்று உத்தரவின் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது தலைவி படத்தின் வெளியீடு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.