உ.பியில் மட்டுமல்ல உலகம் முழுக்க தான் பலாத்காரம் நடக்கிறது -காயத்ரி ரகுராம்

உ.பியில் மட்டுமல்ல உலகம் முழுக்க தான் பலாத்காரம் நடக்கிறது என காயத்ரி ரகுராம் காட்டமாக தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்ய நாத் தலைமையில் பா.ஜ.க., ஆட்சி நடைபெறுகிறது. ஊரடங்கு காலத்தில் சிறுமிகளை, இளம்பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்யும் சம்பவங்கள் இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது. வாரம் ஒரு வன்புணர்வு, மாதத்திற்கு இரண்டு சிறுமிகள் கொலை என்பது அங்கு சர்வ சாதாரணமாக உள்ளது.

கடந்த 2 நாட்களில் மட்டும், ஹாத்ராஸ், பல்ராம்பூர், புலந்தசர், ஆசம்கர் ஆகிய பகுதிகளில் இரண்டு இளம்பெண்கள், இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இளம் பெண்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இதனை கர்நாடக காங்கிரஸ் நிர்வாகி ஸ்ரீவத்சவ் விமர்சித்திருந்தார். அவருக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள தமிழக பாஜக நிர்வாகியான காயத்ரி ரகுராம், “உலகம் முழுக்க பலாத்காரம் நடக்கிறது. காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானிலும் நடக்கிறது. பலாத்காரம் செய்யப்பட்டவர்களை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்துவது கேவலமானது. சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். அது விரைவில் நடக்கும்” என்று கூறியுள்ளார்.

அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஊழல் கூட தான் உலகம் முழுவதும் நடைபெறுகிறது. அதற்காக அதனை எதிர்க்காமல் விட்டுவிடலாமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here