குடியுரிமை சட்டம் 2021 அறிமுகப்படுத்தப்பட உள்ளது – அமெரிக்கா !

அமெரிக்க அதிபர் ஜோ பிடென் அமெரிக்க குடியுரிமை மசோதா 2021 ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தச சட்டத்தால் பல இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் பயனடைவார்கள்.

இதன் மூலம், வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டுகளுக்காக ஒரு நாட்டில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கான முந்தைய கட்டுப்பாடுகள் நீக்கப்படும்.

இந்த சட்டம் இயற்றப்பட்ட பின்னர், எச் -1 பி (H1-B) விசா வைத்திருப்பவர்களைச் சார்ந்தவர்களும் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அமெரிக்காவில் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இந்தியர்களும் நன்மையளிக்கும்.

இந்த ஆண்டின் அமெரிக்க குடியுரிமைச மசோதா நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரண்டிலும் மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, அதிபர் ஜோ பைடன் கையொப்பம் இட்டு சட்டமாக்கப்பட உள்ளது.