ஒரு கிலோ கறிவேப்பிலை 120 ரூபாய்

சமையலுக்கு அடிப்படை தேவையான பொருட்களுள் ஒன்றான கறிவேப்பிலை மதுரையில் கிலோ ஒன்றுக்கு 120 ரூபாயை எட்டியுள்ளது.

இலவசமாக கொடுத்த கருவேப்பிலையை தற்போது ரூ.5க்கும் 10க்கும் விற்பனை செய்யும் நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இது தொடர்பாக வியாபாரிகளிடம் கேட்டபோது கிலோ ரூ.5 முதல் 10 ரூபாய் வரை விற்கப்பட்ட கருவேப்பிலை கடந்த ஒரு மாதமாக ரூ.100க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறினார்.

இதற்கு காரணம் அதிக மழை, மற்றும் கடும் பனிப்பொழிவால் கருவேப்பிலை உற்பத்தி பாதிக்கப்பட்டு வரத்து குறைவாலும் விலை அதிகரித்து விட்டது