மசாஜ் செய்ய ஏற்ற எண்ணெய்கள் மற்றும் அதன் சிறப்புகள் !

உடல் வலி குறைய மற்றும் உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்க வாரம் ஒரு முறை மசாஜ் செய்து கொள்ளலாம்.மசாஜ் செய்வதன் மூலம் உடல் சோர்வு குறையும்.இதனால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, உடல் ரிலாக்ஸாக இருக்கும்.

ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்தால், சரும வறட்சி தடைபடுவதோடு, உடல் வலி நன்கு குறையும்.பாதாம் எண்ணெயால் மசாஜ் செய்தால், உடல் வலி தணிவதோடு, சரும வறட்சி ஏற்படாமலும் இருக்கும்.

கடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் தசைகள் நன்கு புத்துணர்ச்சியடைந்து, எலும்புகள் நன்கு வலுப்பெறும்.ஜிஜோபா ஆயில் கொண்டு மசாஜ் செய்வதால் பருக்களைப் போக்கும்.

இதில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை நிறைந்துள்ளது. எனவே பருக்கள் அதிகம் இருப்பவர்கள், இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.