கடுகு எண்ணையின் மருத்துவ குணங்கள் தெரியுமா !

இந்திய சமையல்களில் பயன்படுத்த கூடிய கடுகு எண்ணையில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன.இது நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன.மேலும் இது எலும்புகளை வலுப்படுத்தவும் சிறந்த உணவாக உள்ளது.

கடுகு விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் இந்த கடுகு எண்ணெய் தனிச்சுவையைக் கொண்டது.கடுகு எண்ணெயில் ஒமேகா 3, வைட்டமின் ஈ ,பி 6 சத்துகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக் கின்றன. இவற்றில் 6 0 சதவீதம் மோனோசாச்சுரேட் கொழுப்பு அமிலம் இருக்கிறது. மேலும்21 சதவீ தம், பாலி அன்சாச்சுரேட் அமிலங்கள் நிறைந்திருக்கிறது.

இந்த எண்ணெய் உடலில் இருக்கும் உறுப்புகளின் சீரான செயல்பாட்டுக்கு கெட்ட கொழுப்புகள் உடலில் சேரவிடக் கூடாது. இது இதயத்துக்கு மிகவும் நல்லது.இதில் இருக்கும் வைட்டமின் ஈ சத்து சருமத்துக்கு இயற்கை சன்ஸ்க்ரீனாக விளங்குகிறது.

கடுகு எண்ணெயில் இயல்பாகவே தொற்றுக்கிருமிகளை எதிர்க்கும் பண்புகள் அடங்கியிருக்கிறது. இது பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றை எதிர்த்து அழிக்கும் ஆற்றல் கொண்டது.