ஏ.சி பேருந்துகள் இயக்க அனுமதி – தமிழகம் !

தமிழகத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து ஏசி பேருந்துகளை இயக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவித்து உள்ளது .

இருப்பினும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்துகளில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது .

மேலும் பயணிகள் பின்பக்க வழியாக மட்டுமே பேருந்தில் ஏற வேண்டும், முன்பக்கம் வழியாக மட்டுமே பேருந்துகளில் இருந்து இறங்க வேண்டும். அனைத்து இருக்கைகளும் பேருந்துகளில் நிரம்பிவிட்டால் கூடுதல் பயணிகளை அனுமதிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.