திருவட்டாறு கோவிலில் திருடப்பட்ட நகை மீட்பு !

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நடந்த கொள்ளையில் மீட்கப்பட்ட நகைகள் இன்று நாகர்கோவில் நீதிமன்றம் கொண்டு வரப்பட்டது.கன்னியாகுமரி மாவட்டத்தில் 2000 ஆண்டு பழமை வாய்ந்த ஆதிகேசவ பெருமாள் கோவில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்று. இந்த கோவிலில் 22 அடி நீள சயன நிலை மூலவர் சிலை கடு சர்க்கரை படிகம் மூலிகையால் ஆனது.

கடந்த 1989 ஆம் ஆண்டு இந்த கோவிலின் மூலவருக்கு மேல் அணிவிக்கப்பட்டிருந்த தங்க தகடு படிப்படியாக கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

நாகர்கோவில் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் 2010ஆம் ஆண்டு வரை வழக்கு நடந்தது பின்னர் 2011 ஆம் ஆண்டு இந்த வழக்கு ஜெ எம் 1 நீதிமன்றத்தில் மாற்றப்பட்டது. குற்றவாளிகளில் 14 பேருக்கு தல 6 ஆண்டு ஜெயில் தனித்தனி அபராதமும் 9 பேருக்கு தலா 3 ஆண்டு ஜெயில் தனித்தனி அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் நான்கரை கிலோ தங்கம் மீட்கப்பட்டது. இந்நிலையில் மீட்கப்பட்ட தங்கம் இன்று நாகர்கோவில் நீதிமன்றம் கொண்டு வரப்பட்டது. இன்று மாலைக்குள் இந்த தங்கம் அறநிலையத் துறையிடம் நீதிமன்றம் ஒப்படைக்கிறது.