இன்றைய தங்கம் விலை

உலகம் முழுக்க தொழில்துறை தேக்கமடைந்துள்ளதால், உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியதால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை உயர்ந்து வந்தது.

இந்த நிலையில், 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்ட நிலையில் இப்போது தங்கம் விலைல குறைந்து வருகிறது.

இன்று வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. வெள்ளியின் விலை 1.70 ரூபாய் குறைந்து 1 கிராம் ரூ.72.30க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.72,300 என்ற அளவில் உள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 34 ஆயிரத்து 720க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.