மக்களை மீட்க சென்ற உக்ரைன் விமானம் கடத்தல் !

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் அந்த நாட்டுக்கு புதிய பெயரை சூட்ட முடிவு செய்துள்ளனர்.‘இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான்’ என்று அதற்கு பெயர் சூட்ட இருக்கிறார்கள்.

தலிபான் ஆட்சிக்கு அஞ்சி, ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டில் இருந்து வெளியேற முயற்சித்து வருகின்றனர்.காபூலில் இருந்து பல நாட்டு விமானங்களும் தங்கள் நாட்டு மக்களை மீட்டு வருகின்றன.

தற்போது, ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்களை ஏற்றி கொண்டு உக்ரைன் நாட்டிற்கு திரும்பிய விமானம் தற்போது மயமாகியுள்ளது .மேலும் இந்த விமானம் கடத்தப்பட்டு ஈரானுக்கு கொண்டு செல்லப்பட்டதாக உக்ரைனில் உள்ள அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.இதற்கு ஈரான் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த விமானத்தை கடத்தியது யார் மற்றும் விமானம் எங்கே உள்ளது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.