நடிகைகள் ராகிணி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி !

2020 ஆம் ஆண்டில், நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி போதை மருந்து வழக்கு தொடர்பாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும் அவர்களின் மாதிரிகள் அக்டோபர் 2020 இல் சேகரிக்கப்பட்டு ஹைதராபாத்தின் மருத்துவ ஆய்வகத்திற்கு (சிஎஃப்எஸ்எல்) சோதனைக்கு அனுப்பப்பட்டது. சோதனையின் அறிக்கைகள் 10 மாதங்களுக்குப் பிறகு இப்போது வெளிவந்துள்ளன.

தற்போது நடிகைகளான ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி போதைப் பொருள் பயன்படுத்தி இருப்பது FSL சோதனை முடிவில் உறுதியாகி உள்ளது.

மேலும் காவல்துறையினர் அடுத்தக்கட்ட நடவடிக்கை உடனடியாக தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக விரைவில் கைதுசெய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.