2020- 21ஆம் கல்வியாண்டில் இளங்கலை முதலாமாண்டு, முதுகலை படிப்புகளில் நடப்புக் கல்வி ஆண்டில் சேர்ந்து பின்னர் விலகிய மாணாக்கரின் முழுக் கல்விக் கட்டணத்தை கல்லூரிகள் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக ஏராளமான புகார்கள் பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு வந்ததால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. பல்கலைக்கழக மானியக்குழுவின் இந்த உத்தரவை மீறி செயல்படும் கல்லூரி நிர்வாகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



