அதிமுக தேர்தல் பணிகள் தீவிரம்!

கூட்டணியை பொறுத்தவரை பாஜகவுடன் கூட்டணி என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிவித்துள்ளனர்.

இந்த சூழலில்தான் தாங்கள் பெருபான்மையான இடங்களில் போட்டியிகூட்டணியை பொறுத்தவரை பாஜகவுடன் கூட்டணி என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிவித்துள்ளனர்.ட அதிகபட்சமாக 160 இடங்களிலாவது போட்டியிட அதிமுக தலைமைகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக இளம் பெண்கள் மற்றும் இளைஞர் பாசறையில் பொறுப்பாளர்கள் மாற்றம் செய்யப்படாமல் இருக்கிறார்கள். எனவே புதிய பொறுப்பாளர்களை நியமிப்பதோடு, 150 வாக்காளர்களுக்கு ஒரு நிர்வாகியை நியமித்து தேர்தல் பணிகளை இம்மாதத்திற்குள் தீவிரப்படுத்தவும் அதிமுக கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டமும் இம்மாதம் 28 ஆம் நடைபெறவுள்ள நிலையில், அடுதடுத்து தேர்தல் பணிகள் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.