அழகு நிலையங்களுக்கு குட்பை இனி வீட்டிலே பெடிக்யூ !

நாம் முகத்தை பராமரிப்பது போல் பாதங்களையும் பராமரிக்க வேண்டும்.கால்கள் தான் நம்முடைய உடலின் முழு எடையையும் சமநிலையில் இருக்க செய்கிறது.போதிய பராமரிப்பு இல்லாமல் பாதங்களில் பல பிரச்சனை ஏற்படும்.இதற்கு அழகு நிலையம் செல்ல தேவை இல்லை நம்
வீட்டிலே இருக்கும் பொருள்கள் கொண்டு சுத்தம் செய்யலாம்.ஒருவர் சுகாதாரமான முறையில் இருப்பவர் என்பதை அவர்களின் கால்களை பார்ப்பதன் மூலம் கண்டறியலாம்.

குளிக்கும் போது கால்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.தூங்க செல்லும் முன் ஒவ்வொரு இரவும் கால்களை நன்கு கழுவ வேண்டும். முதலில் கால்களை குறைந்தது 5-10 நிமிடங்கள் வரை வெதுவெதுப்பான நீரில் கால்களை ஊற வைக்க வேண்டும்.

படிகக்கல் கொண்டு தேய்க்கவும் இதனால் இறந்த செல்களை நீக்க உதவுகிறது.நக வெட்டியைக் கொண்டுக் கூடுதலாக வளர்ந்துள்ள கால்விரல் நகங்களை வெட்டிவிடவும். கொஞ்சம் மாய்ஸ்சரைசர் எடுத்து கால்களில் பரவலாக தேய்க்கவும்.இப்படி வாரம் ஒரு முறை செய்தல் கால்களை அழகாக இருக்கும்.