உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது தவறான தகவல்

சட்டப்பேரவைத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடப்போவதில்லை என்ற தகவல் தவறானது என்று கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலினை முதல்வர் ஆக்குவதுதான் என்னுடைய இலக்கு. எம்.எல்.ஏ ஆவது என்னுடைய இலக்கு அல்ல. தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை’ என்று உதயநிதி ஸ்டாலின் அவருக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்ததாக ஒரு தகவல் வெளியானது. இதனை திமுக தரப்பு மறுத்துள்ளது. தேர்தல் தொடர்பாக தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ். பாரதி இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது உதயநிதி தேர்தல் போட்டியிடவில்லை என வெளியாக தகவல் குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த கே.என்.நேரு, “உதயநிதி தேர்தலில் போட்டியிடவில்லை என வெளியான தகவல் தவறானது. தேர்தலில் போட்டியிடுவதற்காக தானே பணம் கட்டியுள்ளனர் என்று கூறினார். உதயநிதிக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த நேரு இது மு.க.ஸ்டாலின் முடிவு செய்வேண்டியது என முடித்துக்கொண்டார்.