14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பு – தமிழகம் !

தமிழகத்தில் கரோனா தொற்றின் 2 ம் அலை உலுக்கி வருகிறது.இறப்பு மற்றும் நாளுக்கு நாள் தொற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.அரசு மக்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தற்போது மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

திங்கள்கிழமை காலை 4 மணி முதல் 24ஆம் தேதி காலை 4 மணி வரை இரண்டு வாரங்களுக்கு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.