தமிழக மக்கள் கவனத்திற்கு…எவை எவை இயங்கும் !

night curfew in goa : கோவாவில் இரவு நேர ஊரடங்கு
கோவாவில் இரவு நேர ஊரடங்கு

தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதை கட்டுப்படுத்தும் வகையில் வரும் திங்கள் முதல் மே 24ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதி.

உணவகங்களில் பார்சல் மட்டும் அனுமதி.இ-காமர்ஸ் மூலம் உணவு, மருந்துகள், காய்கறிகள் விநியோகம் செய்ய அனுமதி.

சரக்கு வாகனங்கள் போக்குவரத்து, விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், ஆக்சிஜன் வாயு எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருளை எடுத்துச்செல்லும் வாகனங்கள் ஆகியற்றுக்கு அனுமதி.

பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி.வங்கிகள், தானியங்கி பணம் வழங்கும் மையங்கள், வங்கி சார்ந்த போக்குவரத்து, காப்பீடு நிறுவன சேவைகள் அதிகபட்சம் 50 விழுக்காடு பணியாளர்களுடன் அனுமதி.