திமுக அமைச்சர்கள் பதவியேற்பு !

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி வெற்றி பெற்றது.விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முன்னிலையில் மு.க. ஸ்டாலினுக்கு பதவி பிரமாணம் வாசித்து முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.இதன்மூலம் அதிகாரப்பூர்வமாக மு.க. ஸ்டாலின் முதலமைச்சரானார்.

இதனை தொடர்ந்து அமைச்சர்களும் பதவியேற்றனர். முதலில் புதிதாக உருவாக்கப்பட்ட நீர்வளத்துறை அமைச்சராக துரைமுருகன் பதவியேற்றுக்கொண்டார். பின்னர் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக கே.என். நேரு பதவி பிரமாணம் வாசித்து பதவியேற்றுக்கொண்டார்.

அதனை தொடர்ந்த அமைச்சர்கள் பதவியேற்றனர்.அனிதா ராதாகிருஷ்ணன் – மீன்வளம்,ஐ பெரியசாமி – கூட்டுறவுத்துறை,அர. சக்கரபாணி – உணவுத்துறை,எவ வேலு – பொதுப்பணித்துறை,மா.சுப்ரமணியன் – சுகாதாரத்துறை.

பழனிவேல் தியாகராஜன் – நிதி மற்றும் மனிதவளம்,கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் – வருவாய்,பெரியகருப்பன் – ஊரக வளர்ச்சித்துறை,எம்ஆர்கே பன்னீர்செல்வம் – வேளாண்மை.