ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய தலைவர் மணிஷ் மகேஸ்வரி பணியிட மாற்றம் செய்யபட்டுள்ளது. ட்விட்டர் இந்தியாவின் தலைவர் மணீஷ் அமெரிக்காவில் உள்ள ட்விட்டர் தலைமையகத்தில் மூத்த இயக்குனராக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் நிறுவனத்தின் மூத்த இயக்குநர், வருவாய் வியூகம் மற்றும் செயல்பாடுகள் பிரிவில் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டது சர்ச்சையயானது. மத்திய அரசின் அழுத்தத்தால் இது நடந்ததாக காங்கிரஸ் புகார் தெரிவித்தன.தற்போது ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய பிரிவு அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.



