தமிழகத்தின் 2021-22 ஆண்டிற்கான பட்ஜெட், சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.முதல் முறையாக காகிதம் இன்று டிஜிட்டல் முறை இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் முதல் முறையாக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. வேளாண்மை துறைக்காக தனி பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
வேளாண் பட்ஜெட்டில் வேளாண் துறை, கால்நடைத்துறை, பால்வளத்துறை போன்றவற்றில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள், மேலும் நிதி ஒதுக்கீடு போன்ற விபரங்கள் அறிவிக்கப்படும்.இந்த பட்ஜெட் விவசாயிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



