மூச்சுத்திணறல் காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மதுரை ஆதினம் உடல்நலக் குறைவால் காலமானார்.
மதுரை ஆதீன மடத்தின் 292-வது ஆதீனமான அருணகிரிநாதர்(77) சுவாச பிரச்சனை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 9ஆம் தேதி மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அனுமதிக்கப்பட்டதிலிருந்தே உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததாக கூறப்படுகிறது.
இருப்பினும் வெண்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில் அவர் இன்று இரவு காலமானார்.



