நகை கடன் தள்ளுபடி..!

கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்று பட்ஜெட்டில் தாக்கலில் நிதியமைச்சர் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு பயனாளிகளுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. ஆனால், நகை கடன் தள்ளுபடியை குறித்து அறிவிக்காத நிதியமைச்சர், கூட்டுறவு கடன் சங்கங்களில் வழங்கப்பட்ட நகைக்கடன்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்களை தள்ளுபடி செய்வது இந்த அரசின் முன்னுரிமையாகும் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.

முந்தைய அரசு, தேர்தலுக்கு முன்பாக பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. இத்திட்டத்தின் மொத்தச் செலவு 12,110.74 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது. முந்தைய அரசால் இந்த அரசின் மீது சுமத்தப்பட்ட மிகப் பெரிய நிதிச்சுமையாக இது அமைந்தது.

இதற்காக 4,803.95 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதுபோன்ற இதர நகைக் கடன்களை தள்ளுபடி செய்யும்போதும் இதே நிகழ்வு பொருந்தும் என்பதால், அது குறித்து உரிய விசாரணைக்குப் பிறகு, தள்ளுபடி குறித்து இந்த முடிவு எடுக்கப்படும்.

அப்போதுதான் தவறு செய்பவர்கள் தவிர்க்கப்பட்டு, உண்மையான பயனாளிகள் பலன் அடைவர் என கூறினார்.

இந்த அறிவிப்புக்கு பின்னிலையில் நகை கடன் குறித்து முக்கிய தகவல் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை தங்க நகை அடமானம் வைத்து கடன் பெற்றவர்கள் விபரங்களை தயார் நிலையில் வைக்கக்கோரி கூட்டுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பயனாளிகளின் கேஓய்சி மற்றும் குடும்ப அட்டை விவரங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.