துக்ளக் தர்பார் படத்தின் டீஸர் நாளை வெளியாகும்!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் டீஸர் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டீஸர் நாளை காலை 12.30 மணிக்கு, சன் டிவியின் யூ-டியூப் தளத்தில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்து வரும் இப்படத்தில், இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா பணியாற்றி வருகிறார்.

முன்னதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி விஜய் சேதுபதி ரசிகர்களிடையே வைரலானது குறிப்பிடத்தக்கது