பிரதமர் மோடி அணைத்து மாநில முதல்வருடன் கரோனா தடுப்பூசி பற்றி ஆலோசனை !

கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடத்தை அடுத்து அணைத்து நாடுகளிலும் போடப்பட்டு வருகிறது.இந்திய கொரோனா தடுப்பூசியின் ஒத்திகை நடைபெற்று வருகிறது.மேலும் பிரதமர் மோடி அணைத்து மாநில முதல்வருடன் காணொலி வாயிலாக கரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து ஆலோசனை செய்யவுள்ளார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இணைந்து தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசிக்கும் – பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இணைந்து தயாரித்த கோவாக்சின் தடுப்பூசிக்கும் அவசரகாலப் பயன்பாட்டிற்கான அனுமதியை இந்திய தலைமை மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஜனவரி 03ஆம் தேதி வழங்கியது.

வரும் ஜனவரி 16ஆம் தேதிமுதல் நாட்டில் கரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக மூன்று கோடி முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்படும் எனத் தெரியவந்துள்ளது.

மேலும் , அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக கரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.