அமமுக நேர்காணல் 8 மற்றும் 9ஆம் தேதி நடைபெறும்

தமிழக சட்டசபை தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் வருகிற 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

மார்ச் 10-ம் தேதிக்கு பதில் வருகிற 7-ந்தேதி மாலை 5 மணிக்குள் விருப்ப மனு அளிக்க வேண்டும் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மார்ச் 10-ந்தேதி அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என டி.டி.வி.தினகரன் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.