உலக டாப் 100 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி

நடப்பு ஆண்டுக்கான உலக டாப் 100 பல்கலைக்கழகங்கள் அடங்கிய தரவரிசை பட்டியலில் 12 இந்திய கல்வி நிலையங்கள் இடம் பெற்றுள்ளன.

இதன்படி, உலக டாப் 100 தரவரிசையில், பாம்பே ஐ.ஐ.டி., டெல்லி ஐ.ஐ.டி., சென்னை ஐ.ஐ.டி., காரக்பூர் ஐ.ஐ.டி., பெங்களூர் ஐ.ஐ.டி., கவுகாத்தி ஐ.ஐ.டி., பெங்களூர் ஐ.ஐ.எம்., அகமதாபாத் ஐ.ஐ.எம்., ஜே.என்.யூ., அண்ணா பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஓ.பி. ஜிண்டால் பல்கலைக்கழகம் ஆகிய 12 இந்திய கல்வி நிலையங்கள் இடம் பெற்றுள்ளன.

இவற்றில் சென்னை ஐ.ஐ.டி.யானது பெட்ரோலிய என்ஜினீயரிங் பிரிவில் உலக அளவில் 30-வது தரவரிசையைப் பிடித்துள்ளது. உலக அளவில் பாம்பே ஐ.ஐ.டி. 41வது இடமும், ஐ.ஐ.டி. காரக்பூர் தாது பொருட்களுக்காக 44-வது இடமும் பிடித்துள்ளன.

இதேபோல், டெல்லி பல்கலைக்கழகம் வளர்ச்சி படிப்புகளுக்காக உலக அளவில் 50-வது தரவரிசையை பெற்றுள்ளது என மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.